நாட்டில் கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொலைபேசி வாயிலாக உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இ-சஞ்சீவனி என்ற தொலை தூர மருத்துவ சேவை அளிக்கும் புதிய திட்டத்தை அமல்படுத்தியது. சுமார் 4000 மருத்துவர்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தினந்தோறும் நோயாளிகள் தொலைபேசி வாயிலாக மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றனர். அதன்படி தினமும் சுமார் 90 ஆயிரம் நோயாளிகள் இந்த இ-சஞ்சீவனி தளத்தைப் பயன்படுத்தி மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர்.
இதில் இ-சஞ்சீவனி ஏ பி-எச்டபிள் சி, இ-சஞ்சீவனி ஓடிபி என்று இரண்டு வகையான மருத்துவ ஆலோசனை பிரிவுகள் உள்ளது. இந்த மருத்துவ ஆலோசனைகளை பெறுவதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை 15,99,283 மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளது. மேலும் இந்தத் திட்டம் மூலம் தொலை தூர மருத்துவ ஆலோசனை பெற்று அதில் முதல் மாநிலமாக ஆந்திராவும், இரண்டாவதாக கர்நாடகாவும் உள்ளது.