ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருள்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெற முடியுமோ அவற்றை வெளிமாநிலங்களில் இருந்தும் பெற முடியும். கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்து தொழில் துறைகளும் முடங்கியது. மக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டன.
இதனால் சாதாரண நிலையில் இருந்த பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் மத்திய அரசு விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனவே இந்தியாவில் பொது விநியோக அமைப்பு மூலம் நாட்டின் பசியின்மை என்பது குறைக்கப்பட்டு வருவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டின் வருமான இழப்பு, உணவு பற்றாக்குறை போன்றவை எதிர்காலத்தில் இருக்காது என்கிற அளவுக்கு பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது.
ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை நாடுதழுவிய அளவில் எடுத்து செல்ல உதவி செய்கிறது. இந்த திட்டம் தற்போது 34 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் 23 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் சுமார் 75 கோடி பயனாளிகளை கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் NFSA இன் கீழ் உள்ள அனைத்து தகுதியான ரேஷன் கார்டு உடையவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த ரேஷன் கார்டின் மூலம் பயன் அடையலாம். ONORC யின் கீழ் தொடங்கப்பட்ட மேரா ரேஷன் செயலி ஆங்கிலம், இந்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் கிடைக்கிறது. 90% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தாலும் 37% காடுகள் மட்டுமே மொபைல் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.