Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் மொழி சேர்ப்பு …!!

மத்திய தொல்லியல் துறை பட்டய படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ்மொழி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் பண்டித்தீன் தயாளன் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு சமஸ்கிருதம், பாலி, அரபு, மொழிகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசு தொடர்ந்து தமிழ்மொழி மீது பாரபட்சம் காட்டி வருவதாக பலரும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் செம்மொழியான தமிழ்மொழியையும் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

Categories

Tech |