தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் மட்டும் ஏற்பு தெரிவிக்காமல் ஆலோசனை நடத்தி வருகிறது. சமூக வலைத்தளங்கள் தேசிய பாதுகாப்பு கருதி தேவைப்பட்டால் அரசு கண்காணிப்பில் இருக்கும் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு ஃபேஸ்புக், கூகுள் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.