Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிகள்…. கால அவகாசம் கேட்கும் ட்விட்டர்….!!!!

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அதன் விதிகளுக்கு ட்விட்டர் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக பின்பற்றுமாறு மத்திய அரசு ட்விட்டருக்கு இறுதியாக கடிதம் அனுப்பியது.

அதில் அரசின் செயல்பாடுகளுக்கு இணங்க மறுப்பது ட்விட்டரின் அர்ப்பணிப்பு இல்லாமையை நிரூபிக்கிறது எனவும், இந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான அனுபவத்தை வழங்க வேண்டும் எனவும் இந்த கடிதத்திற்கு இணங்கவில்லை என்றால் அதன் விளைவுகளை சந்திக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று கால அவகாசம் வழங்கும்படி அரசுக்கு டுவிட்டர்  கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |