நாட்டில் எங்கு போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய பாஜக அரசு அதனை முடக்க பார்ப்பதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் குபேஸ் பாகல் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் குபேல் பாகல் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் மத்திய பாஜக அரசு அதனை முடக்க பார்ப்பதாகவும், டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தைக் குலைக்க விவசாயிகளை பாகிஸ்தானிகள் என்றும் இடைத்தரகர்கள் என்றும் கூறிய அவமதிப்பது கண்டனத்திற்குரியது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் மத்திய அரசிற்கு விவசாயிகள் பயப்பட மாட்டார்கள் என தெரிவித்த அவர் தேசிய மாணவர் சங்கம் சார்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு 53 டன் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.