தொல்லியல் துறை சார்பிலான பட்டய படிப்பில் தமிழ் மொழி இணைக்கப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
மத்திய அரசின் தொல்லியல் துறை கல்லூரியில் முதுநிலைப் படிப்பிற்கான இரண்டு ஆண்டுகால பட்டயப்படிப்பு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது. முதுகலை படிப்பிற்கான தகுதி பட்டியலில் தமிழ்மொழி தவிர்க்கப்பட்டிருந்தது.இதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின், மூத்த தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் முதலானோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. இதனிடையில் மத்திய தொல்லியல் துறை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் செம்மொழியான தமிழ் மொழியை பட்டயப் படிப்பிற்கான தகுதி பட்டியலில் இணைத்து வெளியிட்டது.இந்நிலையில் தொல்லியல்துறை படிப்பில் தமிழ்மொழி சேர்க்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.