Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலி…. எப்போது நிரப்பப்படும்?…. அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம்….!!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலியிடம் குறித்து மக்களவையில் பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், “2021 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் உள்ள 40.35 லட்சம் பணியிடங்களில் தற்போது 30.55 லட்சம் பணியாளர்கள் பணியில் உள்ளனர். ஓய்வு, பதவி உயர்வு,ராஜினாமா மற்றும் இறப்பு போன்ற காரணங்களால் காலியிடங்கள் உருவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசில் புதிய பணியிடங்களை உருவாக்குவது நியமனம் செய்வதும் சம்பந்தப்பட்ட அமைச்சகம், துறையின் பொறுப்பு ஆகும். இது தொடர்ச்சியான நடைமுறை.காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேரைநியமனம் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவுறுத்தினார் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |