மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பத்தாம் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாஅறிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே புதிய நாடாளுமன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட போவதாக அறிவித்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மேலும் மத்திய அரசு இந்த திட்டத்தில் அவசரம் காட்டுவது ஏன் என்றும், கட்டுமான பணிகளை செய்வதற்காக மரங்களை வெட்டக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை ஐந்தே நிமிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கெடு விதித்து உள்ளார்கள்.