மத்திய அரசுக்கு நிலுவைத் தொகையான 70 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு விட்டதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக மின்சார வாரியம் மூலம் 70 கோடி ரூபாய் நிலுவைத் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதேபோல் மத்திய அரசு பல்வேறு துறைக்கு வழங்கக்கூடிய நிலுவை தொகைகளை காலம் தாழ்த்தி கொடுக்கிறது.
இதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கடந்த ஆட்சி காலத்தில் 6600 கோடி நிதிச்சுமை ஏற்பட்டது. கடந்த ஓராண்டில் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக வட்டி சேமிப்பு 2200 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் நிர்வாக திறமையால் நிதியை கையாளுவதற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.