Categories
அரசியல்

மத்திய அரசுடன் எப்படி அட்ஜஸ்ட் பண்ணி போவது….? ஸ்டாலினுக்கு கிளாஸ் எடுக்கும் ஓபிஎஸ்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்திய அரசின் நிதி மூலமாக தமிழ்நாட்டில் 7000 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இது மிகவும் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. தமிழகத்தில் சாலை அமைத்தால் அது தமிழர்களுக்கு தான் நன்மை இதற்கு ஏன் தமிழக அரசு சரிவர பதில் கூற மறுக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இந்தப் பிரச்சனை எல்லாம் அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்கப்பட கூடிய ஒன்று. ஆனால் அதிகாரிகள் சரிவர பதில் அளிக்காததால் இது மேலிடம் வரை செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மத்திய அமைச்சர், சாலை திட்ட பணிகளுக்கு ஏன் தமிழக அரசு ஒத்துழைப்பு தர மறுக்கிறது என இவ்வளவு தூரம் வருத்தப்பட்டு கூறுவது, மாநில அரசு விழிப்புணர்வுடன் செயல்பட வில்லையோ என மக்களை நினைக்க வைக்கிறது. கூட்டணி சார்ந்த அரசியலை புறந்தள்ளி விட்டு மக்களுக்கு எது நன்மை பயக்கும் அதை மனதில் வைத்து முதல்வர் செயல்பட வேண்டும். மேலும் மக்கள் நலத் திட்டம் என்பது மத்திய அரசின் நிதி, மாநில அரசின் ஒத்துழைப்பு மற்றும் வங்கிகளில் இருந்து பெறப்படும் கடன் அனைத்தையும் உள்ளடக்கியது. மத்திய அரசின் நிதியின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு திட்டமும் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் விதமாகவே உள்ளது. அவ்வாறு இருக்கையில் ஏன் முதல்வர் இந்த திட்டத்தை மட்டும் புறக்கணிக்கிறார். என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |