மத்திய அரசு வருகின்ற ஆறு மாதங்களில் 4 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் 12 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.அவ்வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நிதியாண்டில் முதல் பாகத்தில் 7 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பான செலவுகளுக்காக மீதமுள்ள ஆறுமாதங்களுக்கு 4 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
அந்த கடனை வெளிநாடுகளில் இருந்து பெற இருக்கின்றது. இந்த தகவலை மத்திய அரசின் பொருளாதார விவகார செயலாளர் தரும் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அனைத்து அரசுகளும் நிதி நிலைகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியாவும் குறிப்பிடத்தக்கது.