மத்திய அரசு அனுமதி அளித்ததால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவ தொடங்கியதையடுத்து மார்ச் மாதம் 23 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் அதிகம் கூடும் இடமான திரையரங்கு திறப்பது எப்போது என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்ததால் நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் திரையரங்குகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகின்றன. திரையரங்கின் உள்ளே 24 முதல் 30 டிகிரி வெப்பநிலை இருக்கும்படியும் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அமர வேண்டும் என்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.