Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு அனுமதி…. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பரிசோதனை…!!

பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்றினால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டது. மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்தது.

இதனையடுத்து இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிக்கு வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து காங்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

 

Categories

Tech |