Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கவில்லை….. டெல்லி துணை முதல்வர்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. இந்நிலையில் டெல்லியில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு இதுவரை இலவச தடுப்பூசி வழங்கவில்லை என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லிக்கு ஜூலை மாதத்திற்கு 15 லட்சம் தடுப்பூசிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இது அனைவருக்கும் போதாது. டெல்லி அரசு சுயமாக 1.43 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |