Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு?…. இம்மாதமே வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். அதன்படி இந்த மாதம் அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக வீட்டுவாடகை படியும் உயர்த்தப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் வசித்து வரும் ஊருக்கு ஏற்ப அவர்களுக்கு 9%, 18%, 27% என வீட்டு வாடகை படி தொகை செலுத்தப்படுகின்றது. அகவிலைப்படி உயர்வுக்கு ஏற்றவாறு வீட்டுவாடகை படியும் விரைவில் உயர்த்தப்படும். வீட்டு வாடகைப்படி தொகை அடுத்த கட்டமாக எப்போது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் எந்த தகவலும் இல்லை. இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு பற்றி தகவல் வந்த பின் வீட்டு வாடகைப்படி உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Categories

Tech |