இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு 27% ஆக இருந்த அகவிலைப்படி 1% ஆக அதிகரிக்கப்பட்டு மொத்தம் 28% ஆக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3% உயர்த்தப்பட்டு 33% வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தீபாவளி படியும் உயர்த்தப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் வழங்காமல் இருந்த அகவிலைப்படி நிலுவை தொகையும் வழங்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் மற்றொரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அடுத்த மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வருகிற ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகையை உயர்த்துவது குறித்து முன்மொழிதல் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வீட்டு வாடகை பற்றிய உயர்த்தும்படி அரசியல் ரயில்வே ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அவ்வாறு ஒப்புதல் கிடைத்தால் ரூ.11.56 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.