மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது. அதாவது ஏஐசிபிஐ இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள சில டேட்டாக்களின் அடிப்படையில், ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் 2023 ஆம் வருடத்தின் துவக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அளவில் பரிசுத்தொகை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இம்முறை அகவிலைப்படியை 4 % வரை அரசாங்கம் உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி மாதத்துக்குள் மத்திய அரசு அகவிலைப்படியை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக 2023 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து ஊழியர்கள் அதிக அலவன்ஸைப் பெறுவர்.
2023 ஆம் ஆண்டும் மார்ச் மாதத்திற்குள் அரசாங்கம் அதனை அறிவிக்கக்கூடும். புது உத்தரவின்படி ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டால் ஊழியர்களுக்கு கிடைக்கும் அகவிலைப்படி மொத்தம் 42% ஆக அதிகரிக்கும் என சில தகவல்கள் தெரிவிக்கிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூபாய்.720 அதிகரிக்கும் மற்றும் அதிகபட்ச அடிப்படை ஊதியமாக மாதந்தோறும் ரூ.2276 உயரும் என்று கூறப்படுகிறது.