16 மாதங்களாக சிக்கியிருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி நீண்டநாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்ற ஒன்றரை வருடங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து 3 முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், ஊழியர்களின் நிலுவைத்தொகை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக மீண்டும் ஒரு முடிவெடுக்கப்படும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அமைச்சரவை செயலாளருடனான உரையாடலில் இது பற்றி பேசப்படலாம் என கூறப்படுகிறது. 18 மாதம் நிலுவைத்தொகையினை அரசாங்கம் 3 தவணைகளில் செலுத்தக்கூடும் என்று தகவல் தெரிவிக்கிறது. இத்தொகையின் முதல் தவணையை ஊழியர்கள் 2023ம் வருடத்தின் தொடக்கத்தில் பெறக்கூடும் எனவும் பேச்சு அடிபடுகிறது.