மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் வெளிவந்த தகவலின்படி கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருந்த அவர்களது அகவிலைப்படி நிலுவை 2022 -ஜனவரியில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புத்தாண்டில் 2,00,000 ரூபாய்க்கும் அதிகமாக பிஏ நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள். இந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு டிஏ மற்றும் டிஆர் 17%-ல் இருந்து 30% மாற்றியது. ஆனால் அவர்களுக்கு இதுவரை நிலுவைத் தொகை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ தொகையை ஒருமுறை செட்டில்மெண்ட் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு பணம் வீக்கம் அல்லது விலைவாசியில் பொதுவான அதிகரிப்பு இழப்பீடு வழங்கு வதற்காக வருடத்திற்கு 2 முறை டிஏ மற்றும் டிஆர் தொகை வழங்கப்படும்.
ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ம் அதிகரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது இருந்தபோதிலும் ஜூன் மாதம் 30-ஆம் தேதியன்று 2021 அன்று டிஏ அதிகரிக்க தொடங்கியது. எனினும் நிலுவைத் தொகை குறித்து அப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய தகவலின்படி லெவல் -1 ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை ரூபாய் 11,1880 முதல் 37,554 ரூபாய் வரை மாறுபடும், லெவல்-13 இல் உள்ள ஊழியர்களுக்கு இந்த நிலுவைத் தொகை 1,44,200 முதல் 2,18,200 வரை இருக்கலாம். நிலுவைத் தொகையை மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.