Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA, DR நிலுவைத்தொகை?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகையை இந்த ஆண்டில் வழங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தொகை கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால் ஒரு சில காரணங்களால் தாமதமான இந்த நிலுவைத்தொகை அறிவிப்பை 2022 ஜனவரியில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அகவிலைப்படி (DA) உயர்வுத் தொகையாக ரூ.2 லட்சம் வரை அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது DA தொகையை வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்க இருப்பதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க மத்திய அமைச்சரவை முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அகவிலைப்படி ஆனது பணவீக்கத்தை குறைக்க, வருடத்துக்கு இருமுறை என்ற வீதத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் DA மதிப்பீடுகளின்படி லெவல்-1 ஊழியர்களுக்குரிய நிலுவைத் தொகை 11,880 ரூ முதல் 37,554 ரூ வரை இருக்கலாம். அதேநேரம் லெவல்-13 ஊழியர்களுக்கு 1,44,200 ரூ முதல் 2,18,200 ரூ வரை DA நிலுவைத்தொகை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |