Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடைக்காதா?….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 28 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்த்துவதாக கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது.

அதாவது நிதியமைச்சகத்தின் பேரில் பரவும் அந்த படத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உயர்வால் ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படியும், ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலை நிவாரணமும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் அந்த உத்தரவு போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதியமைச்சகம் அப்படி ஒரு உத்தரவே வெளியிடவில்லை என்று அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகவே அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் வழக்கம்போல் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கும்.

Categories

Tech |