மத்திய அரசு ஊழியர்கள் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செலவுத்தொகையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது தனியார் மருத்துவமனையில் அவசரத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அதற்கு மெடிக்ளைம் பண்ணி கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பொதுவாக சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஹெல்த் ஸ்கீம் எனப்படும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே மெடிகிளைம் செய்து கொள்ள முடியும். இது தொடர்பான ஒரு வழக்கில் தான் அவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அதற்கான மருத்துவச் செலவு தொகையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.