Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA 3% அதிகரிப்பு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 31% அகவிலைப்படியானது வழங்கப்படுகிறது. ஜனவரி டிஏவில் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை அதிகரித்தால் ஊழியர்களுக்கு 33- 34 சதவிகிதம் வரை டிஏ கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை ஊழியரின் சம்பளம் அதிகரிக்கும். கடந்த டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக ஊழியர்களின் பொருத்துதல் காரணி அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் வாயிலாகவும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உயரும். தற்போது அகவிலைப்படியைப் பற்றி AICPI அளித்துள்ள அறிக்கையினபடி, நவம்பர் மாதத்துக்கான  அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியாகியுள்ளன. இதன் மூலமாக 2 முதல் 3% வரை டிஏ அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக விரைவாக அறிவிப்பு வெளியாகலாம். இதனிடையில் நவம்பர் மாத AICPI குறியீடு 125.7 ஆகும். இதனால் 2% அகவிலைப்படி அதிகரிக்கும். எனினும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளி விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1% அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு உறுதியாகிவிடும்.

ஆகவே அகவிலைப்படியை 3% அதிகரித்த பின், மொத்த டிஏ 34 சதவீதமாக இருக்கும். இதன் காரணமாக 18,000ரூ அடிப்படை ஊதியம் பெறுபவர் மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். இவர் முன்னதாக பெற்றதை விட வருடத்துக்கு ரூ.6,480 அதிகம் பெறுவார். மத்திய அரசு ஊழியர்களின் டிஏ உயர்வை கணக்கிடும் முறை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தின் கணக்கீடு:

# பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 18,000

# புதிய அகவிலைப்படி (34%) – ரூ.6120/மாதம்

# அகவிலைப்படி இதுவரை (31%) – ரூ.5580/மாதம்

# எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 6120- 5580 = ரூ 540/மாதம்

# ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ.6,480.

அதிகபட்ச அடிப்படை ஊதியத்தின் கணக்கீடு:

# பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 56900

# புதிய அகவிலைப்படி (34%) – ரூ 19346/மாதம்

# அகவிலைப்படி இதுவரையிலும் (31%) – ரூ 17639/மாதம்

# எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 19346-17639 = ரூ. 1,707/மாதம்

#ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484

Categories

Tech |