மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய வருடத்துக்கான பம்பர் பரிசை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது இரட்டிப்பாகும். அத்துடன் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து 34 சதவீதமாக உயரலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் ஜனவரி 26ம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதை தவிர மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் உயர்த்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில், AICPI இன்டெக்ஸ் புள்ளி விவரங்களின்படி குறியீடு 125.7ஐ எட்டியுள்ளது. இதன் விளைவாக 2022 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை குறைந்தது 2 சதவீதமாக அதிகரிக்கப்பட இருக்கிறது. அப்படியென்றால் மொத்த தொகை 33 சதவீதமாக அதிகரிக்கும். தற்போது அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படி தொகையை பெறுகின்றனர். எனினும் பொருத்துதல் காரணி தொடர்பாக விரைவில் ஒரு பெரிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் சுமார் 3 வருடகால கோரிக்கையான ஃபிட்மென்ட் காரணி குறித்தும் அரசு முடிவு எடுக்கலாம் என்றும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி 26ம் தேதிக்கு முன்பு, இந்த விவகாரம் குறித்து அரசுப் பிரதிநிதிகளை ஊழியர்கள் அமைப்புகள் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகே இது தொடர்பாக முடிவெடுக்க முடியும்.