மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு வருடத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியாண்டில் நாட்டில் இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளிகளின் அடிப்படையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இறுதியாக 2021 -ஜூலை மாதம் நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியானது 35% உயர்த்தப்பட்டது. இவற்றுடன் தொடர்புடைய மற்ற படிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் கொரோனா அதிகரிக்கும். சுமார் 3 வருடங்களுக்குப் பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் பிட்மெண்ட் காரணி தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களின் பிட்மெண்ட் காரணி உயர்ந்தால் அவர்களின் அடிப்படை சம்பளம் பெரிய அளவில் உயரும். இருந்தாலும் அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. நவம்பர் மாதத்திற்கு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் படி 2 முதல் 3 சதவீதம் வரை உயரும் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதம் டிஏ 2% முதல் 3% வரை உயர்ந்தால் ஊழியர்களுக்கு 33 சதவிகிதம் முதல் 34% வரை கிடைக்கும். இந்தக் காரணத்தினால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். அவ்வாறு அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்திய பின்னர் மொத்த டிஏ 34% இதனால் 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்திலிருந்து மொத்த ஆண்டு அகவிலைப்படி 73,440 ரூபாயாக இருக்கும்.
ஆனால் சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு 6,380 ஆக இருக்கும். மேலும் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வரவு வைக்கப்படும் என்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகமாக ஊழியர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் நிலுவைத் தொகை கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி இந்த மாதமே அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வு குறிந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக இந்த அறிவிப்பின் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.