மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வருகிற மார்ச் மாதம் முதல் இது மேலும் 3 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றின் மூலமே 34 சதவீதம் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மாற்றங்களை அரசு அறிவிக்கிறது.
இந்த அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை பெருக்கினால் அதன்மூலமாக கணக்கிடப்படுகிறது. முன்னதாக அடிப்படை ஆண்டு 1963 -65 கொண்டு அகவிலைப்படி கணக்கிடப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது 2016=100 என்ற அடிப்படை ஆண்டுடன் கூடிய புதிய வரை வரிசையை மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. இவற்றின் மூலமாக அகவிலைப்படியை கணக்கிடும் முறையிலும் மாற்றம் ஏற்படும்.