Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்?…. வெளியான சூப்பர் தகவல்…. உடனே பாருங்க….!!!!

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) தொகையானது 34 சதவீதமாக நீட்டிக்கப்பட உள்ளதாக சில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இது குறித்து இதுவரையிலும் வெளிவந்துள்ள ஊடக அறிக்கையின்படி, DA அதிகரிப்புடன் அதன் ஒரு முறை நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நீண்ட காலமாகவே மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த 18 மாத DA நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

இது தொடர்பான முடிவு ஜனவரி 26ஆம் தேதிக்குள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு இந்த DA நிலுவைத் தொகை வழங்கினால் ஊழியர்களுக்கு பெரும் தொகை கிடைக்கும். அதன்பின் அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) விரைவில் அதிகரிப்பை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 2021ல் ஏற்பட்ட அகவிலைப்படி அதிகரிப்புக்கு பின் HRA தொகை திருத்தப்பட்டது. தற்போது, HRA விகிதங்கள் நகர்ப்புற வகையின்படி 27%, 18% மற்றும் 9% ஆக வழங்கப்படுகிறது.

இதனைதொடர்ந்து DA தொகை 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அப்போது இருந்து, HRA இல் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. தற்போது ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், HRA இன் அடுத்த திருத்தம் 3% இருக்கும். அதிகபட்சமாக தற்போது உள்ள விகிதம் 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக இருக்கும் என்று தெரிகிறது. எனினும் அகவிலைப்படி 50% தாண்டும் போது இது நடக்கும். ஏனெனில் DA தொகை 50 சதவீதம் தாண்டினால் வீட்டு வாடகைக் கொடுப்பனவு 30 சதவீதம் தாண்டும் என்று அரசின் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |