அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மொத்தமாக கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி கடந்த 18 மாதங்களாக கொடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 33 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி கொடுக்கப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள் பலர் அகவிலைப்படி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மொத்தமாக செலுத்துமேயானால் ஒரு சில ஊழியர்களுக்கு அகவிலைப்படி மட்டுமே 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இதுகுறித்து கேபினட் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் அகவிலைப்படி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.