Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கர்நாடக மாநில நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தில் யாருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் 7 நாட்களுக்கு சிறப்பு விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோன்று நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்களும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறைய எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு விடுப்பின் போது தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலம் அலுவலக அவசரப் பணிகளை அவர்கள் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் ஜனவரி 31 ஆம் தேதி (நாளை) முதல் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்து கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை முதல் பள்ளி கல்லூரிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |