Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 31 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த மாதம் மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 34 சதவீதம் அகவிலைப்படி அளித்தால் அடிப்படை சம்பளம் ரூபாய் 18,000 பெறும் நபர் 34 சதவீதம் அகவிலைப்படி ரூபாய் 6,120 சம்பளம் கூடுதலாக கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் 18 மாதங்களாக நிலுவையிலுள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகை ஒரே தவணையில் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தகவல் வந்துள்ளது. ஊதிய உயர்வு என்பது மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியம் 18,000-ல் இருந்து 26 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது. அனைவருக்கும் 8 ஆயிரம் வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து சம்பள உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சண்டிகரில் தேசிய சுகாதார இயக்க ஆம்புலன்ஸ் சேவை பிரிவில் பணிபுரிந்து வரும் சுமார் 50,000 ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2022 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 81 சதவீதம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் வரையறுக்கப்பட்ட பங்களிப்பில் ஏதேனும் மாற்றம் இருப்பின், அவர்களுக்கு ஊதியம் உயர்வானது வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |