மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டு நிலையில், தற்போது கூடுதலாக 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.