Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்….!!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் 7வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 31 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவிகிதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வீட்டுவாடகை படியும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து
எச்ஆர்ஏவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப் பட்டபோது எச்ஆர்ஏவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்ந்துள்ளதை தொடர்ந்து எச்ஆர்ஏவும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |