Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஜூலையில் வரும் ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வருகின்ற ஜூலை மாதத்தில் மீண்டும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமிக பெரிய செய்தி வந்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பின் தற்போது மீண்டும் 2020 ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நுகர்வோர் விலை குறியீடு குறைக்கப்பட்ட பிறகு தற்போது மார்ச் மாதத்தில் அதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி பட்டியல் வெளியான பிறகு அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது புள்ளிவிபரங்களின்படி ஜூலை மாதத்தில் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் ஏப்ரல் மே ஜூன் மாத புள்ளிவிவரங்கள் வெளியான பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் வரும் மாதங்களில் இதே நிலை தொடர்ந்தால் அகவிலைப்படி அதிகரிப்பு 4 சதவிகிதம் வரை இருக்கலாம்.2022 ஜனவரி மாதத்தில் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) 125.1 ஆக இருந்தது.

அது பிப்ரவரி மாதத்தில் மேலும் சரிந்து 125க்கு வந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 புள்ளி ஏற்றம் ஏற்பட்டு 126 ஆக உயர்ந்தது.அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலையில் இருக்கும். ஜனவரி முதல் ஜூன் வரையிலான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படியிலேயே இது இருக்கும். ஜனவரி, பிப்ரவரியில் சரிவு இருந்தபோதிலும், மார்ச் மாதத்தில் ஏற்றம் கண்டுள்ளது. எனவே ஜூலையில் அகவிலைப்படி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ் அகவிலைப்படி ஆண்டுக்கு இரு முறை உயர்த்தப்படுகிறது. முதல் முறையாக ஜனவரியில் அதிகரிக்கும். அதன் பிறகு ஜூலையில் உயரும். ஜனவரி மாதத்துக்குப் பிறகு மார்ச் மாதத்தில் அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |