மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வால் அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரித்தது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் தற்போது அனைத்து மண்டலங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்து உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்வே வாரியம் ஊழியர்களின் அகவிலைப்படியை 14% உயர்த்தி உள்ளது. இதானல் ஏராளமான ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள். ரயில்வே ஊழியர்களுக்கு DA உயர்வுடன் மற்றொரு மகிழ்ச்சி அறிவிப்பும் உள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்வுடன் நிலுவையில் உள்ள தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 14% டிஏ உயர்வு மற்றும் 10 மாத நிலுவை தொகையுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7% – 7% என்று 2 பகுதிகளாக ஊதிய உயர்வு பொருந்தும் என்று ரயில்வே வாரியம் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி கடந்த ஆண்டு 2021 ஜூலை 1 முதல் அகவிலைப்படி 7% அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் ஜனவரி 1 2022 முதல் 7% உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 6 வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு டிஏ வழங்கப்படுகிறது. இந்த ஊழியர்களின் டிஏ ஜூலை 1 2021 முதல் 196%, அதாவது 7% அதிகரிக்கும். அதனைப்போலவே 2022 ஜனவரி 1 முதல் 7% உயர்த்தினால், அது 203% அதிகரிக்கும். இந்த 2 உயர்வுகளையும் இணைத்து, ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளத்தில் 10 மாத நிலுவை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.