Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 14 % உயர்வு…. யாருக்கெல்லாம் தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசுத்துறையில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) ஒரே நேரத்தில் சுமார் 14 % ஆக அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த முடிவால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரயில்வே ஊழியர்களுக்கான அரசாணையை வெளியிடும்போது, ஊழியர்களுக்கு 10 மாத நிலுவைத்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதை தவிர 14 % அகவிலைப்படி உயர்வை ரயில்வேவாரியம் 2 பகுதிகளாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் ஜூலை 1, 2021 முதல் DA தொகை 7 சதவீதமும், ஜனவரி 1, 2022 முதல் DA தொகை 7 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 6-வது ஊதியக்குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு முதல் 7 % உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 6வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 189 % DA வழங்கப்படுகிறது. இந்த ஊழியர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் DA தொகை 196 % அடிப்படையில் மட்டும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று 2022 ஜனவரி 1 முதல் 7 % அதிகரிப்புடன் ஊழியர்களுக்கு மொத்த DA, 203 சதவீதமாக அதிகரிக்கும்.

இந்த 2 உயர்வுகளையும் இணைத்து ஊழியர்களுக்கு மே மாத சம்பளத்துடன் 10 மாத நிலுவைத்தொகையும் வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலையில் ஊழியர்களுக்கு DA உயர்வு மற்றும் 10 மாத நிலுவைத்தொகையை ஒரே நேரத்தில் கிடைத்தால் அவர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வு ஏற்படும். இதற்கு முன்பாக சென்ற மார்ச் 30 அன்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA தொகையை அரசு 3 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பின் ஊழியர்களின் DA 31 சதவீதத்திற்கு பதிலாக 34 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |