Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு…. வெளியான திடீர் உத்தரவு….!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் கொரோனா தொற்றின் காரணமாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையானது ரத்து செய்யப்பட்டது. அதாவது மறு அறிவிப்பு வரும் வரை, இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இதை அடுத்து, அரசு இந்த முடிவினை மத்திய அரசு ஊழியர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பில் அக்கறை இருப்பதால்  எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொருவரும், இந்த வருகை பதிவு கருவியான பயோமெட்ரிக்கில் விரலை வைத்துக் கொண்டு இருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 2018 , ஆகஸ்ட் மாதத்தில் மாநிலங்களவையில் பணிபுரியும் 1,300 ஊழியர்களின் வருகைப் பதிவினை, பயோமெட்ரிக் முறையாக  மாற்றப்பட்டது. மேலும் மார்ச் 2020-ஆம் ஆண்டு, பயோமெட்ரிக் முறையானது ஊழியர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல்  குறைந்ததையடுத்து, மீண்டும் பயோமெட்ரிக் நடைமுறையை செயல்படுத்த உள்ளது என மாநிலங்களவை செயலகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, ஜூன் 1-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பின்படி, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பயோமெட்ரிக் முறை மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப பிரச்சனைகளை ஆராய சோதனை முறையில் மே 31-வரை பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |