மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. தேசிய அளவில் பணவீக்கம் உயர்ந்து இருக்கின்ற நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்பட இருக்கின்றது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும்? ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் விலைவாசி உயர்வது மட்டுமல்லாமல் இந்திய ரூபாயின் வாங்கும் திறனும் குறைகின்றது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் முதலும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக பணவீக்கம் பயங்கரமாக உயர்ந்து கொண்டே வருகின்றது. உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 7.79 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதற்கு முன் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகின்றது. ஜூலை மாத நெருங்கிவிட்டதால் பணவீக்கத்தால் அரசு ஊழியர்கள் திணறி வருவதாலும் மிக விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது போல ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் வழங்கப்படுகிறது.
அதனால் அவர்களுக்கான பென்ஷன் தொகையும் அதிகரிக்கின்றது. தற்போது 32 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 56,900 ரூபாய். அதில் அகவிலைப்படி 34 சதவிகிதம் என்னும்போது 19,346 ரூபாய் கிடைக்கின்றது. ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி 38% சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆக 21,622 ரூபாய் கிடைக்கும். அதாவது கூடுதலாக 2,276 ரூபாய் கிடைக்கின்றது. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் உயர்வால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைகிறார்கள்.