மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே செல்வதால் நாட்டில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. எப்போதும் ஜனவரி மாதத்திற்குள் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் வழங்கப்படும் மற்றும் ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது.
இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே 28 சதவீதத்தில் இருந்து அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு தற்போது 34 சதவீதமாக இருக்கின்றது. மேலும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிரடியாக அதிகரித்து வருகின்றது. இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பணவீக்கம் 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் 6.9 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இந்த பணவீக்கத்தை சமாளிக்க வேண்டுமானால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
பணவீக்கத்தால் அரசு ஊழியர்கள் திணறி வருவதன் காரணமாக ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 54 ஆயிரத்து 900 ரூபாய் எனில் அகவிலைப்படி 34 சதவிகிதம் எனும்போது 19 ஆயிரத்து 346 ரூபாய் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கின்றது. மேலும் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் உயர்வினால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறலாம் என அறிவிக்கப்படுகின்றது.