Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. அகவிலைப்படி 5% உயர்வு….. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சம்பளமும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அகவிலைப்படியானது 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம். இதனையடுத்து அகவிலைப் படியானது 5% இருந்தால் சம்பளமானது 34 சதவீதத்திலிருந்து  39% உயரும்.

இதனால் சம்பளமும்  27,000 ரூபாய்க்கு ‌மேல் அதிகரிக்கலாம். இந்த அகவிலைப் படியானது AICBI அளவைப் பொறுத்து வழங்கப்படும். இந்த AICBI குறியீடானது நடப்பாண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சரிவை கண்டது. ஆனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு AICBI குறியீடானது அதிகரித்து வருகிறது. இதுவரை AICBI குறியீடானது 126 ஆக இருக்கிறது. இது மே மற்றும் ஜூன் மாதத்தில் 127-ஐ தாண்டினால் அகவிலைப் படியானது 5% வரை அதிகரிக்கும்.

Categories

Tech |