இந்த வருடத்தின் 2-வது அகவிலைப்படி(DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் முன்பு எதிர்பார்த்ததைவிட தற்போது பெரிய ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதற்கு முன்பாக எதிர்பார்க்கப்பட்ட DA உயர்வு 4 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்ட போதிலும், தற்போது தொழிலாளர்களுக்கான சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீடு (அல்லது) CPI(IW) தரவு காரணமாக இந்த எண்ணிக்கையானது உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 34 சதவீதம் ஆக உள்ள DA தொகை அடுத்ததாக 38 சதவீதத்தை எட்டும் என தெரிகிறது.
ஆனால் தற்போது ஊடகங்களில் வெளிவரும் சமீபத்திய அறிக்கைகள் இந்த DA அதிகரிப்பு 5 சதவீதம் ஆக இருக்கும் என கூறுகிறது. இந்த எண்ணிக்கையானது ஏப்ரல் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தற்போது பணவீக்கத்திற்கு எதிராக மத்திய அரசு ஊழியர்கள் பெறக்கூடிய நிவாரணம் ஜூலையில் அதிகமாக உயரக்கூடும் என கணிப்புகள் தெரிவிக்கிறது. அந்த அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் 4 % உயர்வுடன், இந்த கூடுதல் தொகையானது அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் ரூபாய் 8,000 – ரூபாய் 27,000 வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இப்போது 5 % DA அதிகரிக்கப்பட்டால் புது அகவிலைப்படி விகிதமானது 39சதவீதம் ஆக இருக்கும். இதற்கு முன்பாக இந்த வருட மார்ச் மாதத்தில் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் ஆக DA திருத்தம் அறிவிக்கப்பட்டது. இதனிடையில் அடுத்த DA உயர்வை நிர்ணயிக்கும் AICPI குறியீடு ஜனவரியில் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும் குறைந்து இருக்கிறது. ஆனால் மார்ச் மாதத்திற்கான எண்ணிக்கையானது 126 ஆக அதிகரித்தது. அத்துடன் ஏப்ரலில் AICPI எண்ணிக்கையானது 127.7 ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு ஜூலை மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டபடி 4 சதவீதத்திற்கு பதில் 5 சதவீதம் அதிகரித்தால் ஊழியர்கள் பெறும் மொத்த DA 39 சதவீதம் எட்டும்.