Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?…. விரைவில் வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்…..!!!!….

அகவிலைப்படியானது அரசு ஊழியர்களுக்கு பணவீக்கம், விலை ஏற்றத்தால் நிலவக்கூடிய செலவுகளை சமாளிப்பதற்காக வழங்கப்படும் தொகை ஆகும். அத்துடன் ஜனவரி- ஜூன், ஜூலை – டிசம்பர் என அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு சென்ற மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அந்த அடிப்படையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலாகிறது. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஊழியர்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகை செட்டில்மெண்ட் என 2 ஜாக்பாட் அறிவிப்புகளுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அத்துடன் சென்ற சில மாதங்களாக பணவீக்கம் மிகுதியாக உள்ளதால் இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் அல்லது 5 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் அகவிலைப்படி 5 % உயர்த்தப்பட்டால் DA எண்ணிக்கையானது தற்போதைய 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதம் ஆக உயரும். மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி போன்றே, மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களும் அவர்களின் அகவிலை நிவாரணத்தில் (DR) உயர்வை பெறுவார்கள்.

அதுமட்டுமின்றி அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு, 38 சதவீதத்தை எட்டினால் அடிப்படை சம்பளமானது ரூபாய் 18,000 உள்ள ஊழியர்களுக்குமாதம் ரூபாய் 720 (அல்லது) வருடத்திற்கு ரூபாய் 8,640 ஆக சம்பளம் உயர்த்தப்படும். அதன்பின் ரூபாய் 50,000 அடிப்படைச் சம்பளம் இருப்பவர்களுக்கு ரூபாய் 2,000 மாதாந்திர உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த DA அதிகரிப்பு 5 சதவீதம் ஆக இருப்பின், இந்தத் தொகையானது ரூபாய் 18,000 அடிப்படைச் சம்பளத்துக்கு மாதம் ரூபாய் 900 ஆகவோ (அல்லது) வருடத்திற்கு ரூபாய் 10,800 ஆகவோ மாறும். அத்துடன் ரூபாய் 50,000 அடிப்படை சம்பளத்திற்கு ரூபாய் 2,500 உயர்த்தி வழங்கப்படும்.

Categories

Tech |