அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஜனவரி – ஜூன், ஜூலை- டிசம்பர் என வருடம் தோறும் இரண்டு முறை உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரித்தது. இந்த நடவடிக்கையில் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைகின்றார்கள். இந்த சூழலில் இந்த மாதத்தில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகுதியாக இருப்பதால் இம்முறை அகவிலைப்படி நான்கு அல்லது ஐந்து சதவீதம் உயர்த்தப்படலாம் என அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அகவிலைப்படி 5% அதிகரிக்கப்பட்டால் டி ஏ எண்ணிக்கையானது தற்போதைய 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக அதிகரிக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் பெரும் அகவிலைப்படி போன்ற மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களும் அவர்களின் அகவிலை நிவாரணத்தில் உயர்வை பெற்று வருகின்றார்கள்.
அது மட்டுமல்லாமல் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டு 38 சதவீதத்தை எட்டினால் அடிப்படை சம்பளமானது ரூபாய் 18000 உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 720 வருடத்திற்கு ரூபாய் 8640 ஆக சம்பளம் உயர்த்தப்படுகிறது. அதன் பின் ரூபாய் 50,000 அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு ரூபாய் 2000 மாதாந்திர உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த டிஏ அதிகரிப்பு ஐந்து வருடமாக இருப்பின் இந்த தொகையானது ரூபாய் 18000 அடிப்படை சம்பளத்திற்கு மாதம் 900 ஆகவோ வருடத்திற்கு ரூபாய் 10 ஆயிரத்து 800 ஆகவோ மாறும் அத்துடன் ரூபாய் 50,000 அடிப்படை சம்பளத்திற்கு உயர்த்தி 2500 ரூபாய் அதிகரித்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.