மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் ஊழியர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு முறை வருடத்திற்கு 2 முறையாக அகவிலைபடியானது உயர்த்தப்படும். அதன் பிறகு ஒரு வருடத்தில் ஜூன்-ஜனவரி, ஜூலை-டிசம்பர் என அரையாண்டுக்கு ஒருமுறை அகவிலைப்படி ஆனது உயர்த்தப்படும் நிலையில், தற்போது 2-ம் அரையாண்டு தொடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி ரன்வாய் பத்தா கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய நிதிதுறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் கூறினார். அவர் மொத்த பணவீக்கமானது 15.88% ஆக இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 15.18% ஆக குறைந்துவிட்டது. மேலும் அகவிலைப் படியானது மொத்த பண வீக்கத்திலிருந்து கணக்கிடப்படாது எனவும், சில்லறை பண வீக்கத்தில் தான் அகவிலைப் படியானது கணக்கிடப்படும் எனவும் கூறினார்.