Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. வெளியான முக்கிய தகவல்….!!!!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நிலை-1 பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ரூ. 11,880- முதல் ரூ.37,554 வரை நிலுவை தொகை உள்ளது. அதன்பிறகு லெவல் 13 மற்றும் 14-ல் ரூ. 1,44,200 வரை நிலுவைத்தொகை உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவை தொகையை வழங்க வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் நிதி அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |