Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. செப்டம்பர் மாதத்தில் காத்திருக்கும் டிரிபிள் டிரிட்….!!!!!!!

சமீப காலமாகவே லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் அகவிலைப்படி, சம்பள உயர்வு, நிலுவைத் தொகை என்கின்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. ஊழியர்களின் நீண்ட நாளைய காத்திருப்பதற்குப் பின் தற்போது வருகின்ற செப்டம்பர் மாதம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் கிடைக்கப் போகின்றது என கூறப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஊழியர்களுக்கு 4 சதவிகித உயர்வை அரசு அறிவிக்கக்கூடும். இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ 38 சதவீதமாக உயரம் என கூறப்படுகின்றது.

இது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு மகிழ்ச்சியான விஷயங்கள் காத்திருக்கின்றது. அதாவது இதுவரை இருந்த டி ஏ நிலுவை தொகைகள் மற்றும் பிஎஃப் கணக்குகளுக்கான வட்டி பணம் வழங்குவது என மூன்று விதமான நன்மைகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களின் வங்கி கணக்கு இந்த ட்ரிபிள் போனஸ் மூலம் நிரம்பி வழிய போகின்றது. பணவீக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் இது அவர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் இந்த வருடம் நவராத்திரி முன்னிட்டு நடக்க இருக்கின்ற அமைச்சரவை கூட்டத்தின் போது டிஏ உயர்வு அறிவிக்கப்படலாம். மேலும் இந்த ஆகஸ்ட் மாத இறுதியிலும் அல்லது செப்டம்பரிலும் பிஎப் கணக்குகளுக்கான வட்டி குறித்து அறிவிப்பும் வெளியாகலாம்.

இந்த கொரோனா பெருந்தொற்றில் இருந்து பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முடக்கத்தின் காரணமாக அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய 18 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் பலரும் நீண்ட நாட்களாகவே அவர்களின் 18 மாத நிலுவை தொகையை கேட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அரசு நிலுவைத் தொகை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 7 கோடிக்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பார்கள் இந்த மாத இறுதிக்குள் வட்டித் தொகையை பெறுவார்கள் அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த முறை 8.1 சதவீத வட்டி வீதத்தின் பி எஃப் கணக்குத் தொகையை பெறுவார்கள் என சில செய்திகள் தெரிவிக்கின்றது.

Categories

Tech |