மத்தியஅரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. முதல் அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும், 2வது அகவிலைப்படி உயர்வு ஜூலை -டிசம்பர் மாதம் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கான DA வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் நவராத்திரியின் 3ஆம் நாளான செப்டம்பர் 28ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கான DA குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34சதவீதம் என்கிற அளவில் அகவிலைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஜூலை 1, 2022 என்கிற தேதியின் நிலவரப்படி அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38% ஆக இருக்கும் என்றும் 2 மாத DA நிலுவைத்தொகையும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூபாய்.18,000 அளவில் ஊதியம் பெற்று வருகின்றனர். அகவிலைப்படி 4% உயர்த்தப்படும்போது ஒவ்வொறு மாதமும் ரூபாய்.720 கிடைக்கிறது. அதே சமயத்தில் அதிகபட்ச வருடாந்திர சம்பளமாக ரூபாய்.27,312 வழங்கப்படுகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும்போது மாதந்தோறும் ரூ.2,276 அதிகமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.