அகவிலைப்படி (DA) உயர்வின் அடுத்த சுற்றுக்காக லட்சக் கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதற்குரிய அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் இம்முறை கணிசமான டிஏ உயர்வால் பயன் பெறுவார்கள் என அறிக்கைகள் கூறுகிறது. இந்த முறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 4 % உயர்வு இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும் இந்த எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு இதுவரையிலும் எதுவும் வரவில்லை.
மத்திய அரசு ஊழியர்கள் இப்போது 34 % DA பெறுகின்றனர். கணிக்கப்பட்ட எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்டால் இது 38 சதவீதம் ஆக அதிகரிக்கும். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில் இது மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும். இந்தியாவின் சில்லறை பண வீக்கம் ஜூலையில் 6.71 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது என வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது. அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீட்டுத் தரவு, DA அதிகரிப்பின் அளவை தீர்மானிக்கும் முக்கிய அளவுருவாகும். இதனடிப்படையில் அகவிலைப்படியில் 4 % உயர்வு இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த வருடம் ஏப்ரலில் ஏஐசிபிஐ தரவானது 1.7புள்ளிகள் அதிகரித்து 127.7 ஐ எட்டியது. அதன்பின் மே மாதத்தில் 1.3 புள்ளிகள் அதிகரிப்புடன் 129 ஐ எட்டியது. இந்த எண்ணிக்கையானது ஜூன் மாதத்தில் 129.2 ஆகவும், ஜூலையில் 129.9 ஆகவும் அதிகரித்தது. இந்த மாதம் எதிர்பார்க்கப்படும் DA அறிவிப்பு, மார்ச் மாதம் முதல் சுற்று உயர்வு அறிவிக்கப்பட்டபின் ஆண்டின் 2வது அறிவிப்பாக இருக்கும். ஏஐசிபிஐ-யின் எண்ணிக்கையானது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களின் தொடர்ச்சியாக குறைந்தது. அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஒரு உயர்வை பதிவுசெய்தது.
முன்பாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (ஜனவரி, 2022) 31 சதவீதத்திலிருந்து 3 சதவீதம் ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையால் மத்திய அரசின் 1.16 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைந்துள்ளனர். அறிவிப்பு முன்னணியில் ஆகஸ்ட் பிற் பகுதியில் (அல்லது) செப்டம்பர் தொடக்கத்தில் உயர்வு அறிவிக்கப்படலாம் என முந்தைய அறிக்கைகள் பரிந்துரைத்து இருந்தாலும், சமீபத்திய அறிக்கைகள் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் 2022 நவராத்திரி நேரத்தில் அறிவிப்புவரும் என கூறுகிறது.
இதனிடையில் கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் முடக்கப்பட்ட காலத்திற்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பற்றிய நல்ல செய்திக்காகவும் ஊழியர்கள் இந்த பண்டிகை காலத்தில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இம்மாதத்தின் துவக்கத்தில் வந்த அறிக்கைகளின் படி ஊழியர்கள் தரப்பிலிருந்து அரியர் தொகை பற்றிய விவகாரம் பிஎம்ஒ-க்கு வந்துள்ளது. அவற்றில் நல்ல செய்தி விரைவில் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அனைவருகும் இருக்கிறது. இவ்விவகாரத்தில் ஒரு தீர்வை எதிர்பார்க்கும் ஊழியர் தரப்பு, அதற்குரிய பணம் செலுத்தும் முறையைப் பற்றி விவாதிக்க எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.