Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

பழைய ஓய்வூதியத்திட்டம் என்பது சில காலம் வரை நாடெங்கிலும் நடைமுறையில் இருந்த ஒன்று தான். இதற்கிடையில் மத்திய அரசு புது ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தபின், ஏறக்குறைய அனைத்து மாநிலங்களுமே பழைய ஓய்வூதியத்திட்டத்தை கைவிட்டுவிட்டது. அதேநேரம் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் குஜராத்தில் பழைய ஓய்வூதியம் திட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டுமென அரசுஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டுமாக அமலுக்கு வர இருப்பதாக அங்குள்ள மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இப்போது பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவது பற்றி பரிசீலனை செய்ய இருப்பதாக, அங்கு சமீபத்தில் புதியதாக அமைந்த ஆம்ஆத்மி அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குரிய சாத்தியக் கூறுகளை அரசு ஆராயும் என முதல்வர் பகவந்த்மான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எங்களது அரசு பரிசீலனை செய்துவருகிறது. இதன் சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்யுமாறு தலைமைச் செயலாளரிடம் அறிவுறுத்தி இருக்கிறேன். ஊழியர்களின் நலனை காப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக சத்தீஸ்கர் இருக்கிறது. அதன்பின் ஜார்க்கண்ட் மாநிலமும் இதனை செயல்படுத்துவதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்திலும் கூட பழைய ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பரிசீலனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் சென்ற 2004ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி ரத்துசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புது ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசானது அறிமுகம் செய்தது. 01/01/2004 தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் (பாதுகாப்பு படையினர் தவிர்த்து) அனைவருக்கும் புது ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என அரசு கூறியது.

2 திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன…?

பழைய ஓய்வூதியத்திட்டம் என்பது ஒரு ஊழியர் கடைசியாக பெற்ற ஊதியத்தின் படி, ஒவ்வொரு மாதமும் பெற்றுக்கொள்ளும் ஓய்வூதியம் ஆகும். ஆனால் புது ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது 60 % பணி முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். எஞ்சி இருக்கும் 40 % தொகையை ஆனுய்டி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன்கீழ் கிடைக்கும் பலன்கள் கூடுதலாக இருக்கும் என்றாலும், அதற்கு உத்தரவாதம் இல்லை.

Categories

Tech |