Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா காரணமாக அகலவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அடுத்தடுத்து அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவீத அகலவிலைப்படி உயர்வு கிடைத்தது.மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களின் அளவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன.

இதனிடையே அடுத்த அகல விலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகலவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை ஊழியர்களின் வங்கி கணக்கில் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்று அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதத்தில் அகலவிலைப்படி நிலுவைத் தொகைக்கான செட்டில்மெண்ட் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தின் முடிவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுவாகவே நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வெளியிடும். தீபாவளி பண்டிகையின் சமயத்தில் அகலவிலைப்படி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அரசின் இந்த அறிவிப்பை எதிர் நோக்கி 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் ஓய்வூதியத்தாளர்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |